எங்கள் பணி மற்றும் நோக்கம்

தாமரை (தாமரை மலர்) திட்டம், வளர்ந்து வரும் மக்களுக்கும் பூமிக்கும் முழுமையான ஆற்றல் மற்றும் நல்வாழ்வின் விழுமியங்களைக் குறிக்கிறது. 2006ஆம் ஆண்டிலிருந்து ஆரோவில் சர்வதேச நகரத்திற்கு அருகிலுள்ள கிராமங்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம், இதில் 36 குழந்தைகளுக்கான தினசரி விளையாட்டுக் குழு, தினசரி பள்ளிக்கூட நேரத்திற்கு பிறகு, அதாவது மாலையில் 100 குழந்தைகளுக்கான இரண்டு பள்ளிகள் உள்ளன, ஒரு இயற்கைமுறை சுகாதாரக் கல்வித் திட்டம் மற்றும் நல்வாழ்வு சேவை, சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சமூக தலைமை மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட முறையான மற்றும் முறைசாரா கல்வித் திட்டங்கள்.

குழந்தைகளுடனான எங்கள் 14 ஆண்டுகால சேவையின் பின்னணியில், பள்ளிகளில் மனப்பாடக் கல்வியை மிகவும் சார்ந்திருத்தல், போதிய கல்வியறிவு திறன் இல்லாமை, கடன் மற்றும் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாதல் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக தாமரையின் பணி இருந்து வருகிறது. குழந்தைகள் தங்கள் கற்றல் வளைவு (புதிய திறன்களைப் பெறுவதில் குழந்தையின் முன்னேற்ற வீதம்) மற்றும் படைப்பாற்றல், வெளிப்பாடு, பொறுப்புணர்வு போன்ற வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதற்கான சூழலை தாமரை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

நோக்கம்:

அனைவரின், குறிப்பாக குழந்தைகளின் முழுத் திறனையும் நல்வாழ்வையும் வளர்க்க உதவும் சூழலை இணைந்து உருவாக்குதல்.

குறிக்கோள்கள்:

  • குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் சமூகங்களுக்கு உள்ளேயும் மத்தியிலும் முழுத் திறனையும் வளர்த்தல்.

  • பள்ளிக்கூட நேரத்திற்கு பிறகு மாலையில் ஒரு தரமான மற்றும் முழுமையான கல்வியை வழங்குதல் மூலம் பிரதான கல்வி முறைமையில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்தல்.

  • குழந்தைகளை முனைப்புள்ள மற்றும் பொறுப்புள்ள குடிமகனாகவும், பொறுப்பாளர்களாகவும்/ தலைவர்களாகவும் மாற்றுதல்.

  • மக்களின் மற்றும் பூமியின் நல்வாழ்வுக்கு உதவும் சமூகச் சூழலை இணைந்து உருவாக்குதல்.

நாங்கள் எங்கிருக்கிறோம்

தென்னிந்தியாவில் அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில் தாமரை உள்ளது. யுனெஸ்கோ இந்த நகரத்தின் உருவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது சர்வதேச மனித ஒற்றுமையை நிலைநாட்ட விழைகிறது, இது இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உலகம் முழுவதற்கும் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. ஆரோவில் என்பது புத்தாக்கர்களுக்கும், மாற்றத்தை உருவாக்குபவர்களுக்குமான ஒரு மையமாகும், இது நேர்மறையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் கூட்டு சூழ்நிலையை, குறிப்பாக நிலையான வாழ்க்கை, கல்வி, சுகாதாரம், பசுமை நடைமுறைகள் ஆகியவற்றை பேணிக்காக்க விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக, எங்கள் திட்டத்திற்கு ஊக்கமளித்து வருகிறது, மேலும் நகரம் வளர்ச்சி பெற்று வருகின்ற அதேவேளையில் நாமும் இப்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். கிராமத்தின் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட ஆரோவில் கிராமச் செயல்வழி அறக்கட்டளையின் ஒரு பகுதியாக தாமரை உள்ளது.

தினசரி பள்ளிக்கூட நேரத்திற்கு பிறகு மாலையில் எங்களின் இத்திட்டம் தற்போது அன்னை நகர், இடையன்சாவடி ஆகிய இரண்டு கிராமங்களில் நடைபெற்று வருகின்றது. விளையாட்டுக் குழு (பிளே குரூப்) திட்டம் இடையன்சாவடியில் அமைந்துள்ள உதவிப் பள்ளியை அடிப்படையாகக் கொண்டது. ஆரோவில் நிறுவனங்கள், மாலைப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், ஆரோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சுகாதார மையங்களில் நடத்தப்படும் எங்களின் சுகாதாரத் திட்டம் ஒரு இடம் மாறும் திட்டமாகும்.

ஆரோவில்லுக்கும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் இடையிலான உறவு எப்போதுமே ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. இத்தகைய தரிசு நிலங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது ஆரம்பகால ஆரோவில்வாசிகளுக்குத் தெரியாது. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர்களுக்கு உள்ளூர் மக்கள் கற்றுக்கொடுத்தனர். இன்று, இவை இரண்டும் இயற்கை வளங்களான நீர் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற பல வழிகளில் ஒன்றோடொன்று தொடர்புடையவை, இவற்றுள் 1/3 பங்கு உள்ளூர் கிராமங்களிலிருந்து ஆரோவில் குடியிருப்புகளுக்கு வருகின்றன. ஆரோவில்லில் 6,000 பேர் தினசரி வேலைசெய்து வருகின்றனர். மேலும் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, சூழலியல் போன்ற பல துறைகளில் கிராம வளர்ச்சியை மையமாகக் கொண்ட சுமார் 50 ஆரோவில் கிராமத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

தாமரை மலரைப் போலவே, ஒவ்வொருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை முழுமையாக வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளனர் என்று நாங்கள் நம்புகிறோம்.
logo thamarai lotus

எங்கள் அணி

thamarai team

எங்கள் குழு அனைவருக்கும் முழு ஆற்றல், நல்வாழ்வு மற்றும் அதிகாரம் ஆகிய விழுமியங்களில் மிகுந்த ஆர்வத்துடன் நம்பிக்கை கொண்டுள்ளது. எங்கள் திட்டப்பெயர், தாமரை, அதாவது தாமரை மலர் ஆகும், தாமரை மலரைப் போலவே, ஒவ்வொருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை முழுமையாக வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளனர் என்று நாங்கள் நம்புகிறோம். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் கற்றல் வளைவு மற்றும் செயலாண்மையை மேம்படுத்துவதோடு படைப்பாற்றல், வெளிப்பாடு, பொறுப்பு மற்றும் ஆக்கத்திறன் கொண்டவர்களாக இருக்கக்கூடிய சூழலை உருவாக்கவேண்டும் என்று தாமரை எண்ணுகிறது. விளையாட்டுக்குழு (பிளே குரூப்), பள்ளிக்கூட நேரத்திற்கு பிறகான மாலைப் பள்ளி, தலைமை, சுகாதாரம், சுற்றுச்சூழல், பண்பாட்டுக் கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் இதை நாங்கள் செய்கிறோம். மேலும் தகவலுக்கு எங்கள் திட்டப் பகுதியைப் பார்க்கவும்.