சுகாதாரத் திட்டங்கள்

உடல், மனம் மற்றும் ஆன்மா
தாமரையின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு சேவை இயற்கைச் சுகாதாரம், தலைமை மற்றும் போதைப்பழக்கத்திற்கான மறுவாழ்வு திட்டங்கள் போன்ற குடும்ப ஆதரவு சேவைகளை ஒருங்கிணைக்கிறது. யோகா, எனர்ஜி சிகிச்சைமுறை, அக்குபிரஷர், மூலிகைகள், இயற்கை துணைப்பொருட்கள், உணவு மற்றும் உடற்பயிற்சி போன்ற பண்டைய நிரூபிக்கப்பட்ட நுட்பங்களுடன் சுகாதாரப் பராமரிப்பு திட்டம் முதன்மை சுகாதாரச் சேவையை ஒருங்கிணைக்கிறது - இவை அனைத்தும் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றில் சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

உடல்நலம் மற்றும் தலைமைத்துவ திட்டங்களின் கலவையானது நல்வாழ்வையும் முழுத் திறனையும் நிலைநாட்ட உதவுவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளில் மாற்றத்தை ஆதரிப்பதற்கும் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு சுகாதாரப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கும் உதவுகிறது.

அர்ப்பணிப்புள்ள பயிற்சியாளர்
ஆரோவில் ஹெல்த் சர்வீசஸ் மற்றும் இடையன்சாவடி ஹீலிங் சென்டர் (முன்னாள் தாமரை திட்டம்) மூலம் கிராம மக்களுக்கு சுகாதாரத் திட்டங்களை வழங்குவதில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள தகுதி வாய்ந்த யோகா ஆசிரியையான முத்துக்குமாரி இந்த திட்டத்தை வடிவமைத்து, நிர்வகித்து வழங்கி வருகிறார். முத்துக்குமாரி, இவர் ஓர் உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆரம்பச் சுகாதார பராமரிப்பு, ஊட்டச்சத்து, உடலின் பௌதிக மற்றும் ஆற்றல் அமைப்புகள், ஹீலிங் ஆகிய கொள்கைகளை ஒருங்கிணைக்கும் யோகா வகுப்புகளை ஆரோவில்லைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கல்வி மையங்களில் இவர் நடத்தி வருகின்றார். ஒரு பாடத்திட்டம் பயன்படுத்தப்படுகிறது, எனவே பங்கேற்பாளர்கள் குழுவை வழிநடத்த முற்படும்போது இதனைத் தொடரலாம்.

இந்த திட்டம் உடல்நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஆதரவை வழங்கும் பிற அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட சேவையாகும், அதாவது போதைப்பழக்க நீக்கம் போன்ற திட்டங்கள், ஆரோவில் பல் மருத்துவ நிலையம், சுகாதார மையம், ஆரோவில் கிராமச் செயற்வழிக் குழு. முத்துக்குமாரி இச்சுகாதாரக் கல்வியை வழங்குவதில் உறுதியாக உள்ளார், இது மக்கள் தங்கள் சொந்த மற்றும் குடும்ப ஆரோக்கியத்தை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரம் அளிப்பதை ஆதரிக்கிறது. 2018-2019-ஆம் ஆண்டில் அவர் 20 கிராமங்களைச் சேர்ந்த 7 இடங்களில் 150 பெண்களுக்கு பயிற்சி அளித்தார். 2019-2020-ஆம் ஆண்டில் அவர் மகளிர் குழுக்களுடன் தனது பணியைத் தொடர்கிறார், மேலும் 12 அரசு பள்ளிகளிலும், தாமரை கற்றல் மையங்களிலும் இத்திட்டங்களைச் செய்து வருகிறார்.
மது மற்றும் குடிப்பழக்கம் பற்றிய விழிப்புணர்வு
பல குடும்பங்கள் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளுடன் போராடுவதால், மது மற்றும் குடிப்பழக்க நீக்கம் பற்றிய விழிப்புணர்வுத் திட்டம் நல்வாழ்வு சேவையுடன் இணைத்து விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
2016ஆம் ஆண்டில் தாமரை இளைஞர்கள் இடையன்சாவடி கிராமத்தில் மதுவை எதிர்ப்பதற்காக ஒரு நல்வாழ்வு பிரச்சாரத்தை உருவாக்கினர், இது குடிப்பழக்கத்தை எதிர்த்து போராடுவதற்கான ஒரு ஒருங்கிணைந்த முயற்சிக்கு வழிவகுத்தது. இன்று தாமரை ஒரு ஆலோசனை மற்றும் குடிப்பழக்க நீக்கத்திற்கான ஆதரவு சேவையை அளித்து வருகின்றது. மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவ்வப்போது பிரச்சாரங்கள் அதிகரிக்கப்படுகிறது. கூட்டங்களை அமைப்பதற்கும், குடிப்பழக்கத்தை நீக்குவதற்காக 30 நாள் தொடர்ச்சியாக ஆலோசனைகளில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு நிதியுதவியை வழங்குவதற்கும் தாமரைக் குழு ஏஏ அசோசியேஷனுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.