பள்ளிக்குப் பிறகு

2006-இல் இதைத் தொடங்கியபோது, கிராமப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்வதற்கான உதவியைக் கோரினார்கள், அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பலவிதமான துணைக் கல்வித் திட்டங்களையும் அத்தோடு சேர்த்துள்ளோம், ஏனெனில் தாமரையில் நாங்கள் நல்வாழ்வின் விழுமியங்கள் மற்றும் முழுத் திறன் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறோம்- ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் முழுத் திறனும் மலர வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே வீட்டுப்பாடம் உதவி என்பது எங்கள் திட்டங்களின் தினசரி அம்சமாகும், ஆனால் ஆரோவில்லைச் சுற்றியுள்ள இரண்டு கிராமங்களில் விளையாட்டு, கலை, கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் கருப்பொருள் முக்கிய பாட வகுப்புகள், மொழி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு ஆகியவற்றை நாங்கள் கூடுதலாக அளிக்கிறோம். கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள், பட்டதாரிகள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அவர்களின் படிப்பிற்கு வழிநடத்துநர்களாக இருந்து உதவிசெய்வதை நாங்கள் வரவேற்கின்றோம். இப்போது வழிநடத்துநர்களாக உள்ள பலர் எங்களின் பழைய மாணவர்கள் ஆவர். அதாவது அவர்கள் 2006-இல் தாமரையில் குழந்தைகளாக இருந்தனர், இப்போது அவர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இதுவரை நிறைய சாதித்துள்ளனர் மற்றும் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு திருப்பி கொடுக்க விரும்பும் சக்திவாய்ந்த முன்மாதிரியாக உள்ளனர்.
இரண்டு ஊர்களில் பள்ளி நேரத்திற்குப் பிறகான வசதிகள் கொண்ட நமது மையங்கள்:

அன்னை நகர்
பள்ளி நேரத்திற்குப் பிறகான வசதிகள் கொண்ட ஒரு பள்ளி அன்னை நகரில் உள்ளது. அதில் தற்போது தினசரி 80 குழந்தைகளும் 11 இளைஞர்களைக் கொண்ட வழிநடத்துநர் குழுவும் (உள்ளூர் மற்றும் பன்னாட்டைச் சேர்ந்தவர்கள்) உள்ளனர். அத்துடன் சிறப்பு வகுப்புகளுக்கு பல தினசரி வருகைதரும் வழிநடத்துநர்களும் உள்ளனர். இது ஒவ்வொருவரும் ஒரு மாணவர் மற்றும் ஆசிரியராக இருக்கும் ஒரு வளமான கலப்பு பண்பாடுசார் மற்றும் கலப்பு தலைமுறை சூழலை உருவாக்குகிறது. நாங்கள் ஒன்றாக வளர்ந்து கற்றுக்கொள்கிறோம். அன்னை நகரில் 135 குடும்பங்கள் உள்ளன, இங்கு மொத்தம் 1,500 பேர் வசிக்கின்றனர். இவர்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர் ஆவர். ஒரு சுவாரஸ்யமான வளர்ச்சியாக இருப்பது சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இச்சேவையில் கலந்து கொள்ளும் குழந்தைகள்/இளைஞர்களின் எண்ணிக்கை ஆகும், இதனால் சாதித் தடைகள் உடைக்கப்படுகிறது. டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் ஆங்கிலத்தை முக்கிய கூறுகளாக இணைப்பதன் மூலம் எங்கள் திட்டங்களை மேம்படுத்தியுள்ளோம், அத்துடன் உள்நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள பிற இடங்களில் உள்ள திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கான இணைப்புகளுடன் எங்கள் இடத்தின் நுண்ணறிவுத் திறத்தை விரிவுபடுத்தியுள்ளோம்.

கிராம மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக இந்த கிராமத்தில் உள்ள ஆரோவில் நிலத்திற்கு 2019ஆம் ஆண்டில் மேலாளர் பொறுப்பை தாமரைக்காகப் பெற்றோம். எங்கள் புதிய கற்றல் மையத்தின் முதல் கட்டம் 2020 நவம்பரில் இவ்விடத்தில் திறக்கப்பட உள்ளது, இதில் வெளிப்புற படிப்பு பகுதி, சமையலறை, கழிப்பறைகள், விளையாட்டு மைதானத்துடன் ஒரு கீழ்தள வகுப்பறை ஆகியவை அமைந்துள்ளன. அதைத் தொடர்ந்து 2ஆம் கட்டத்தில், 2021ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் 2 கூடுதல் வகுப்பறைகளைத் திறப்பது எங்களின் நோக்கமாகும். உள்ளூர் இளைஞர் மன்றங்களின் ஒத்துழைப்புடனும், ஸ்டிச்சிங் டி ஸாயரின் நிதி உதவியுடனும் தாமரை மாணவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற விளையாட்டு வசதிகளுடன் ஒரு விளையாட்டு மைதானத்தையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம். மேலும் கிராமத்தின் அனைத்து பிரிவினைரையும் குறிப்பாக பெண்களை விளையாட்டுகளில் ஊக்குவிக்கிறோம்.

இடையன்சாவடி
இடையன்சாவடி கிராமத்தின் மிகவும் விளிம்பு பகுதியிலுள்ள ஆரோவில் நிலத்தில் பள்ளி நேரத்திற்கு பிறகான வசதிகள் கொண்ட மையம் அமைந்துள்ளது. தற்போது தினமும் 20 மாணவர்களும் 3 வழிநடத்துநர்களும் இம்மையத்தில் உள்ளனர். இந்த மையம், 2019 ஜூலை மாதம் ஜாய் ஆஃப் இம்பர்மென்ஸ் சமூகத்தின் ஆதரவுடன் திறக்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டில் இந்த கிராமத்தில் தாமரை முதன்முதலாக தனது முதல் திட்டத்தைத் தொடங்கியது, மேலும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வளாகத்தின் பிரச்சினை காரணமாக அம்மையம் மூடப்பட்டது. இந்த கிராமத்தைச் சேர்ந்த தாமரையின் முன்னாள் மாணவர் ஒருவர் தனது வீட்டில் பள்ளி நேரத்திற்கு பிறகான வசதியைத் தொடங்கினார். அதற்கு ஒரு பெரிய தேவை இருந்ததால் அவர் உடனே எங்களை அணுகினார். அவரது ஊக்கம் இந்த கிராமத்தில் மீண்டும் பள்ளிநேரத்திற்குப் பிறகான இந்த சேவை மையத்தைத் தொடங்க எங்களுக்கு ஊக்கமளித்தது. இந்த மையம் தற்போது ஒரு தற்காலிக மூங்கில் கொட்டகை அமைப்பில் இயங்கி வருகிறது. இது 20 குழந்தைகளுக்கு இடவசதியை அளிக்கிறது, ஆனால் எதிர்காலத்தில் இச்சேவையை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் நம்மிடம் உள்ளது.